அனைவருக்கும் வணக்கம்,
இந்த வலைப்பதிவில் நான் கண்ட மற்றும் நான் அனுபவித்த சில சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு வீதியிலும் மேடைக்கு மேடை பெண்ணுறிமைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருக்கிறார்கள். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து நான் வீட்டிற்க்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண் கையில் குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள். அந்த குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தது. பஸ்ஸில் வழக்கத்தை விட சற்று கும்பல் அதிகமாகவே இருந்தது. அந்த பெண் தன் குழந்தையை கையில் ஏந்த முடியாமல் தவித்து, பெண்கள் அமர்ந்திருக்கும் இருக்கையை நோக்கி இருக்கை தருமாறு கேட்டாள். ஒருவரும் தர முயற்சிக்கவில்லை. மீண்டும் அவளுடைய கணவர் கேட்டார் எவரும் எழவில்லை. எவ்வளவோ முறையிட்டும் இருக்கையை தர முன்வரவில்லை. அப்பொழது ஆண்கள் அமர்ந்திருக்கும் இருக்கையை நோக்கி வந்து, இருக்கை தருமாறு கேட்டாள். உடனே இரண்டு ஆண்கள் எழுந்து கொண்டு உட்காருமாறு சொன்னர்கள். அந்த ஆண்களுக்கு இருந்த மனிதநேயம் கூட பெண்களுக்கு இல்லாததைக்கண்டு வருந்தினேன். பெண்களுக்கு பெண்களே உதவி செய்ய மறுக்கும் இந்த சமுதாயத்தை அடியோடு வெறுக்கிறேன்.
இந்த பகுதியின் சமுதாய சாடல் மீண்டும் தொடரும்….
நன்றி.
Saturday, September 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment